Saturday, October 19, 2019

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

* முதலாம் இராஜராஜன் காலத்தில் தொடங்கிய சோழப்பேரரசு, எதன் எல்லை வரைப் பரவியது? - ஒரிசா

* பன்னிரெண்டாம் நூற்றாண்டில் முதன்முதலில் முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்ட இடம் எது? - டெல்லி

* சோழப்பேரரசு எந்த நூற்றாண்டின் இறுதியில் மறைந்தது? - 13-ஆம் நு}ற்றாண்டு

* இந்தியாவிற்கு கி.பி(பொ.ஆ) 1498-ல் மேலைக்கடற்கரையில் வந்திறங்கியவர்கள் யார்? - போர்ச்சுகீசியர்கள்

*முஸ்லீம் ஆட்சியின் தாக்கம் யாருடைய ஆட்சியின்போது உணரப்பட்டது? - அலாவுதீன் கில்ஜி

*யாருடைய காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனா உடனான வணிகம் பெருமளவில் விரிவடைந்தது? - சோழர்கள்

*ஒரு அரசனால் அல்லது அரசியால் ஆளப்படும் ஒரு நாடு? - அரசு

* ஒரு அரசனால் அல்லது அரசியால் ஆளப்படும் பல நாடுகளைக் கொண்ட நிலப்பரப்பு? - பேரரசு

* எந்த நு}ற்றாண்டில், இந்தியாவிற்கு நேரடி கடல் வழியைக் கண்டறிவதில் ஐரோப்பியர்கள் தீவிரமாய் ஈடுபட்டிருந்தனர்? - 15-ஆம் நு}ற்றாண்டு

*வாஸ்கோடகாமா, தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கொண்டு கேரளக் கடற்கரையை எந்த ஆண்டு வந்தடைந்தார்? - கி.பி.(பொ.ஆ) 1498

*கி.பி.(பொ.ஆ) 1510-ல் ---------- கைப்பற்றப்பட்டு இந்தியாவில் போர்சுக்கீசிய அரசின் மையமாக மாறியது. - கோவா

* சோழப் பேரரசின் விரிவாக்கம் யாருடைய காலத்தில் தொடங்கியது? - முதலாம் ராஜராஜன்

* சீக்கிய மதம் 15 மற்றும் 16-ஆம் நு}ற்றாண்டுகளில் வட இந்தியாவில் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? - குருநானக்

*அலாவுதீன் கில்ஜியின் அடிமையும், படைத் தளபதியுமான ------------ தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டது? - மாலிக்கபு+ர்

*தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் எந்தப் பேரரசு நிறுவப்பட்டதால் நிர்வாக, சமூக, நிறுவனக் கட்டமைப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது? - விஜயநகரப் பேரரசு

No comments:

Post a Comment